உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் பணி துவக்கம்

ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் பணி துவக்கம்

கிணத்துக்கடவு; வடசித்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நடந்தது.வடசித்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் 50க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பூமி பூஜை நடந்தது.இதில், எல்.எம்.டபிள்யு., நிறுவன சி.எஸ்.ஆர்., நிதி 17 லட்சம், கோல்டன் சன் நிறுவன சி.எஸ்.ஆர்., நிதி 2.5 லட்சம், அப்துல் ஜாபத் என்பர் 12 லட்சமும், காளிமுத்து என்பர் 2.5 லட்சம் என மொத்தம் 34 லட்சம் மதிப்பீட்டில், 350 மீட்டர் சுற்றளவில் 6 அடி உயரத்தில் சுவர் கட்ட பூஜை நடந்தது. இதில், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ