உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறை நிரப்பும் போராட்டம்; ஆசிரியர்கள் தீர்மானம்

சிறை நிரப்பும் போராட்டம்; ஆசிரியர்கள் தீர்மானம்

- நமது நிருபர் -இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்., மாதம் ஒரு நாள் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். அவிநாசியில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மண்டல மாநாடுநடந்தது. கடந்த 2009ம் ஆண்டுக்கு பின், நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியம், அடிப்படை சம்பளமாக நிர்ணயம் செய்து, 15 ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம், 8,370 என்றும், அதன்பின், நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, 5,200 என்றும் ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஒரே பதவி என அனைத்தும் ஒன்றாக இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் புறக்கணிக்கின்றனர். 2018ல் நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர், ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதியும் கொடுத்தார். ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப்., மாதம் ஒரு நாள் சிறைநிரப்பும் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை