உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, மின்கம்பத்தில் ஸ்கூட்டர் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி கண்ணம்பிரா பகுதியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன், 50. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், ஸ்கூட்டரில் பூளிங்கூட்டம்- தெக்கேத்தறை சாலையில் சென்று கொண்டிருந்த போது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் மோதியது.இதில் தலையில் படுகாயமடைந்த உண்ணிகிருஷ்ணனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து, வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உண்ணிகிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை