உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வரி, விலை வாசி எகிறி விட்டது! மனித சங்கிலி போராட்டத்தில் ஆவேசம்

சொத்து வரி, விலை வாசி எகிறி விட்டது! மனித சங்கிலி போராட்டத்தில் ஆவேசம்

தி.மு.க., அரசு, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்; சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறியது; விலைவாசி உயர்வு, பால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், நேற்று நடந்தது.பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நுாதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிந்து தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார். * வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் நடந்த மனித சங்கலி போராட்டத்துக்கு, அ.தி.மு.க., நகர செயலாளர் மயில்கணேஷ், ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் பொன்கணேஷ் வரவேற்றார்.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி பேசுகையில், ''தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 1.1 கோடி மதிப்பீட்டில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ளபடி, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தினக்கூலி நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்,'' என்றார்.* கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, எம்.எல்.ஏ., தாமோதரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், நகர செயலாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.எம்.எல்.ஏ., கூறுகையில், ''தி.மு.க., ஆட்சியில் மின்சார கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சிறு குறு தொழில்கள் அதிகளவு முடங்கியுள்ளது. சொத்து வரி ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் பாதிப்படைவர். பத்திர பதிவு கட்டணம், அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளது,'' என்றார்.* திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன், தி.மு.க., அரசை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சாஸ்திரி, நகர செயலாளர் அக்கீம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் முன், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமை வகித்தார். - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி