மாணவி பலாத்கார வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதம்
கோவை: கோவையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சதீஷ்,30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடக்கிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது கைதான மூவரிடம், குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதைதொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் ஜிஷா இறுதி வாதத்தை முன் வைத்தார். எதிர் தரப்பு வக்கீல் வாதிட வரும் 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.