உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்பாவில் விபச்சாரம்; இரு பெண்கள் மீட்பு

ஸ்பாவில் விபச்சாரம்; இரு பெண்கள் மீட்பு

கோவை; பீளமேட்டில் உள்ள 'ஸ்பா'வில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக, இரண்டு பெண்கள் மற்றும் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.கோவை, பீளமேடு பகுதியில் உள்ள, ஒரு 'ஸ்பா'வில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பீளமேடு போலீசார் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள, 'கூல் ஸ்பா'வில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்கு இரண்டு பெண்களை, விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்தது. போலீசார் 'கூல் ஸ்பா' மேலாளரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அறிவழகன், 29 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த, இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை