காக்க... காக்க கண், மனநலம் காக்க: தினமலர் நடத்துகிறது கருத்தரங்கு
கோவை : இவ 'எப்பவும் மொபைல் போனையே பார்த்துட்டு இருக்கா, கண்ணு என்னாகுறது''இவன் ஏன் எப்பவும், சோர்வா இருக்கிறான்னு தெரியலையே'- பெற்றோரான உங்கள் மனதை குடையும், இது போன்ற பல பிரச்னைகளுக்கு, தீர்வு அளிக்க 'தினமலர்' நாளிதழ் 'காக்க... காக்க கண், மனநலம் காக்க' எனும், விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தவுள்ளது. கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர்., கல்லுாரி ஆடிட்டோரியத்தில், வரும் 29ம் தேதி காலை 10:30 முதல், மதியம் 12:30 மணி வரை நடக்கும் இக்கருத்தரங்கில், பிரபல டாக்டர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர். 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையும் இணைந்து கருத்தரங்கை நடத்துகிறது.கருத்தரங்கில், 'மொபைல்போன் பாதிப்பிலிருந்து கண்களை காப்பது எப்படி' என்ற தலைப்பில், கோவை டிரினிட்டி மருத்துவமனை கண் டாக்டர் அனுஷா ராஜ்குமார்,'தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி' என்பது குறித்து, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை உளவியல் ஆலோசகர் பார்வதி வைத்தியநாதன்,'உடல் சோர்விலிருந்து காப்பது எப்படி' என்ற தலைப்பில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருணாதேவி, 'தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி' என்ற தலைப்பில், கோவை மனநல மருத்துவர் மோனிஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர். கருத்தரங்கில் பங்கேற்க அனுமதி இலவசம்.மேலும் விபரங்களுக்கு, 88702 60003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.