உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 கோவை: தொழிலாளர்களை பாதிக்கும் நான்கு  தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி,தொ.மு.ச.,மற்றும் அதன் இணைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்தது. சங்க நிர்வாகி துரை தலைமை வகித்தார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களையும், பங்குகளையும் விறக கூடாது. தொழிலாளர்களை பாதிக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அரசின் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது. மின்சார சட்ட திருத்தம் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ