உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி ஆர்ப்பாட்டம்

சூலுார்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பாரதிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க கோரி, ரேஷன் கடைகள் முன் தொடர் ஆர்ப்பாட்டம் நடந்தி வருகின்றனர். அதன்படி பாரதிபுரம் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமையில் திரண்ட விவசாயிகள், இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்திவிட்டு, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் விற்க கோரி கோஷங்கள் எழுப்பினர். கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர். மாநில நிர்வாகி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ