உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு லட்சம் ரூபாய்க்குள் வருமான சான்று கொடுங்க!

ஒரு லட்சம் ரூபாய்க்குள் வருமான சான்று கொடுங்க!

பொள்ளாச்சி, ; 'கிராம கோவில் பூஜாரிகள் புதிய நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்காக, வருமான சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு கிராம கோவில் பூஜாரிகள் பேரவை (வி.எச்.பி.,) சார்பில், மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது:ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவிலில் பணியாற்றும் பூஜாரிகள், கிராம கோவில் பூஜாரிகள் நல வாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்வதற்கு, ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும், என, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வருவாய் அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற, பூஜாரிகள் விண்ணபிக்கும் போது, ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பல அதிகாரிகள் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.இதனால், பூஜாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய முடிவதில்லை. எனவே, ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமான சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான், பூஜாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முடியும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி