நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தனியார் அறக்கட்டளை சார்பில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், காச நோயால் பாதிக்கப்பட்ட, 30 நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்து ஊட்டச்சத்து உணவுப்பொருட்களை வழங்கினார். காசநோய் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.