கால்நடைகளுக்கு மருந்து வழங்கல்..
பொள்ளாச்சி: ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஒரு லட்சத்து, 44 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. மேலும், கோகோ, ஜாதிக்காய், பாக்கு உட்பட பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரம், சிலர், பால் உற்பத்தி மற்றும் இறைச்சிக்காக, கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், சோமந்துறை கிராமத்தில், 'ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை வாயிலாக, இலவசமாக கால்நடைகளுக்கான மருந்துகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. கால்நடை டாக்டர் சரவணன், கால்நடை வளர்ப்போருக்கு, தேவையான மருந்துகளை வழங்கி ஆலோசனை அளித்தார். அறக்கட்டளை நிர்வாகி சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.