மேலும் செய்திகள்
122 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
01-Sep-2024
பொள்ளாச்சி : தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் இலவச பாட புத்தகம், சீருடைகள், காலணி, புத்தக பை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. பிளஸ் 1 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தோறும், நடப்பு கல்வியாண்டுக்கான சைக்கிள் வழங்கப்படுகிறது.ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். துணைத்தலைவர் சையது அபுதாகிர், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
01-Sep-2024