பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் பட்டயச் சான்றிதழ் விழா
கோவை : பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியின் பட்டயச் சான்றிதழ் வழங்கும் விழா, நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேட்டர்பில்லர் மைனிங் பிரிவு (பெங்களூர்) இயக்குனர் ஆண்டி தன்ராஜ் பேசுகையில், “தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் தனித்தன்மையை கட்டமைக்கவும், பொறுப்பை ஏற்கவும் தயாராக இருங்கள்,” எனக் குறிப்பிட்டார். விழாவில், அப்பேரல் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், உள்ளிட்ட 11 துறைகளில் 390 மாணவர்கள் டிப்ளமோ சான்றிதழ் பெற்றனர். இத்துறைகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவர்களுக்கு பதக்கங்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், துறைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.