| ADDED : பிப் 16, 2024 12:12 AM
நெகமம்;பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், நெகமம், சின்னேரிபாளையம் பகுதியில், 500கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் தென்னை சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடக்கிறது. பெட்ரோல் பங்க், காஸ் குடோன், பிளாஸ்டிக் தொழிற்சாலை, தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இதனால், போக்குவரத்து அதிகமுள்ளது.இந்நிலையில், சின்னேரிபாளையத்தில் பிரதான ரோட்டின்இருபக்கமும் பள்ளமாக உள்ளது. இந்த பள்ளத்தால், இங்கு வரும் பஸ், பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை. அதற்கு மாற்றாக, 500 மீட்டம் துாரம் தள்ளி சென்று நிற்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, ரோட்டோரம் உள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.