உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.இதில், பல்வேறு தேவைகள், குறைகள் சார்ந்து, 36 பேர் மனுக்கள் அளித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.தமிழக வெற்றிக் கழக கோவை புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், 'குனியமுத்துார், 89வது வார்டு சுண்டக்காமுத்துார், ராமசெட்டிபாளையம், எம்.ஜி.ஆர்., தோட்டம் பகுதியில், 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இங்கு குழந்தைகள், பெரியோர் என, 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.மின் வசதி இல்லாததால் அச்சத்தில் வசிக்கின்றனர். சோலார் மின்சார வசதி செய்துதர வேண்டும். அதேபோல், 88வது வார்டு ஜே.ஜே., நகர் முதல் மாங்கல்ய கார்டன் வரை பாதாள சாக்கடை பணி நடக்கிறது. இப்பணிகள் முடிந்த பின்னர் தார் ரோடு அமைத்து தர வேண்டுகிறோம்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி