உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது மருத்துவ முகாம் 150 பேருக்கு பரிசோதனை

பொது மருத்துவ முகாம் 150 பேருக்கு பரிசோதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, பொது மருத்துவ முகாம் நடந்தது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு கட்டமாக, பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் அறக்கட்டளை தலைவர் திருமூர்த்தி, செயலர் ரகுராம், டாக்டர் சிவதர்ஷினி குழுவினர், மருத்துவ பரிசோதனை செய்தனர்.ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், ஓட்டுநர்கள், பழகுநர் உரிமம் பெற வந்தவர்கள், 150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை