மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
16-May-2025
சூலுார்; தனியார் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணியால், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால், மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி ஊராட்சி, பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ளது. இந்த ஊராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவில் இருந்து, குடிமங்கலம் வரையில் தனியார் நிறுவனம் சார்பில், தண்ணீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. கோழிப் பண்ணைகள், பெரிய தொழிற் சாலைகளின் வணிக பயன்பாட்டுக்காக நடக்கும் குழாய் பதிக்கும் பணியால், ஜல்லிப்பட்டி ஊராட்சியில், பொதுமக்களுக்கு வினியோகிக்கும் குடிநீர் குழாய்கள், போர்வெல் தண்ணீர் குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் சேதமடைந்ததன. இதனால், தண்ணீர் சப்ளை செய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.இதனால், ஆத்திமடைந்த பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோதி தலைமையில், தனியார் நிறுவனத்தின் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி, மறியல் செய்ய முயன்றனர். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற, சூலுார் தாசில்தார் சரண்யா, சேதமடைந்த குழாய்களை மாற்றி தர தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தனியார் நிறுவனத்தினர் சேதமடைந்த குழாய்களை மாற்றி வேறு குழாய்களை பதித்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
16-May-2025