உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் தவிப்பு

 ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் தவிப்பு

வால்பாறை: நகரில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், மக்கள் நாள் தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. நகரில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் பொள்ளாச்சி - வால்பாறை ரோடு அமைந்துள்ளது. ஒரு வழிப்பாதையாக இருப்பதால், இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை இந்த ரோட்டில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலாபயணியரின் வாகனங்களும் அதிக அளவில் இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வால்பாறை நகரின் பிரதான ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து அதிக அளவில் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் நடந்து செல்ல வழியில்லாமல் நாள் தோறும் தவிக்கின்றனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற வால்பாறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை