வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அட விடுங்க பாஸ் இது நம்ம டுமீல் நாடு .. நம்ம மக்கள் தானே ஒருநாளில் என்ன ஆகப்போவுது..நாம எவ்ளோவ் பெரிய பிரச்சனைக்கு பேசிகிட்டு இருக்கோம் நீங்க மக்களை பத்தி கவலைப்படுறீங்க.. ஆட்சி முக்கியம் அமைச்சரே,,,,,,,
கோவை: தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில், கோவையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஏராளமான அரசு பஸ்களை பயன்படுத்தியதால், வழக்கமாக அவற்றை பயன்படுத்தும் பயணிகள் அவஸ்தைப்பட்டனர். பொதுமக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால், இனி வரும் நாட்களிலாவது, அரசு பஸ்களை பயன்படுத்துவதை அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள். தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் கூட்டம், மாநாடு, போராட்டம் நடத்தினாலே, ஆள் சேர்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணம், மது, பிரியாணி கொடுத்து, பொதுமக்களை அழைத்து வருவது, சாபக்கேடாகி விட்டது. ஆளுங்கட்சியான தி.மு.க. வும் இதற்கு விதிவிலக்கில்லை. சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க. மற் றும் கூட்டணி கட்சிகள் சார்பில், சிவானந்தா காலனி பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொள் ளாச்சி, உடுமலை, நீலகிரி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர், பொதுமக்கள் 100க்கு மேற்பட்ட அரசு பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். இதனால், வழக்கமான வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து அவதிக்குள்ளாயினர். வாகனங்கள் ஸ்தம்பிப்பு
சிவானந்தா காலனியில் ரோட்டை மறித்து மேடை போடப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ஏற்கனவே மேட்டுப்பாளையம் ரோட்டில், பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், வாகனங்கள் சிவானந்தா காலனி வழியாக சென்று வந்தன. அந்த பாதையும் நேற்று அடைக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு பஸ்கள் இல்லாததால், சிவானந்தா காலனியில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகினர். முதியவர்கள் அவஸ்தை
இது ஒரு புறமிருக்க, போராட்டத்துக்கு ஆள் சேர்க்க வீட்டில் தனியாக இருந்த முதியவர்கள் பலரையும், அழைத்து வந்திருந்தனர். பஸ்களின் படிக்கட்டுகள் உயரமாக இருந்ததால், அவர்களால் அதில் ஏற முடியவில்லை. கட்சியினர் அவர்களை பின்னால் இருந்து, பஸ்சுக்குள் தள்ளி விட்ட சம்பவங்களும் நடந்தன. பஸ்சுக்கு வாடகையாம்!
அரசு போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை கோட்டத்தில், 90 மாற்று பஸ்கள் உள்ளன. அவற்றில் இருந்து, 88 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும், வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை கி.மீ., ஓடியது என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்படும். பணியில் ஈடுபட்ட கண்டக்டர்கள், டிரைவர்கள் மறுநாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக இருந்த மாற்று பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பில்லை' என்று, 'நம்பும்படியாக' சொன்னார். என்னதான் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறினாலும், பெரும்பாலான அரசு பஸ்கள், தினசரி வழித்தடங்களில் இயக்கப்படுபவையே. அந்தந்த வழித்தடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில், புலம்பியபடி காத்து நின்ற பொதுமக்களே சாட்சி. பஸ்கள் தாமதம்
ஏற்கனவே சிவானந்தா காலனி பகுதிக்கு பஸ்கள் முறையாக வருவதில்லை. ஒரே நேரத்தில் இரு பஸ்கள் வந்து நிறுத்தப்படும். ஆனால் புறப்படாது. அப்படி இருக்கையில், ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பஸ்கள் அனைத்தும் தாமதமாக வந்தன. - சிவராஜ் கட்டடத் தொழிலாளிகட்சிகளால் அவதி
தினமும் இங்கிருந்து நகருக்குள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. போராட்டத்தால் கடும் அவதி ஏற்பட்டது. நீண்ட நேரம் வாகனங்கள் நின்று, நின்று சென்றன. அரசியல் கட்சிகளின் இந்த போக்கால், அவதிப்படுவது எங்களைப் போன்ற பொதுமக்கள் தான். - கல்பனா தனியார் ஊழியர்ஸ்தம்பித்து விட்டது
வேறு ஒரு வேலைக்காக இங்கு வந்தேன். போராட்டத்தால் இந்த பகுதியே ஸ்தம்பித்து விட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, உரிய நேரத்தில் இங்கிருந்து வெளியேற முடியவில்லை. என்ன செய்வதென தெரியவில்லை. - ஆனந்தராஜ் சுயதொழில்சிட்டி முழுவதும் அவதி
பஸ்கள் வரவில்லை. காத்திருந்து, காத்திருந்து வெறுத்து விட்டது. போன் செய்தால், சிட்டி முழுவதும் இப்படித்தான் இருப்பதாக சொல்கிறார்கள். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அரசியல்கட்சியினர் போராட்டங்களை திட்டமிட வேண்டும். - தேவராஜ் சுயதொழில்
அட விடுங்க பாஸ் இது நம்ம டுமீல் நாடு .. நம்ம மக்கள் தானே ஒருநாளில் என்ன ஆகப்போவுது..நாம எவ்ளோவ் பெரிய பிரச்சனைக்கு பேசிகிட்டு இருக்கோம் நீங்க மக்களை பத்தி கவலைப்படுறீங்க.. ஆட்சி முக்கியம் அமைச்சரே,,,,,,,