உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தோட்டத்தில் மலைப்பாம்பு மீட்டு வனத்தில் விடுவிப்பு

தோட்டத்தில் மலைப்பாம்பு மீட்டு வனத்தில் விடுவிப்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், திறந்தவெளி புற்றுக்கள், மறைவிடங்களில் அதிகப்படியான பாம்புகள் தென்படுகின்றன. வெப்பம் தாங்காமல் இடம்பெயரும் பாம்புகள், வீடுகளில் குளிர்ச்சியான இடங்களை தேடிச் சென்று, பதுங்கி விடுகிறது. தொந்தரவு செய்யும் போது விஷமுள்ள பாம்புகள், ஆபத்தையும் விளைவிக்கிறது. இந்நிலையில், ஆத்துப்பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில், மலைப்பாம்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், 'பைத்தான் மாலரஸ்' என்று அழைக்கப்படும் 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்தனர். இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை