உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்திரம் பதிவு செய்ய  க்யூஆர் கோடு: இனி எளிதாக பணம் செலுத்த வசதி

பத்திரம் பதிவு செய்ய  க்யூஆர் கோடு: இனி எளிதாக பணம் செலுத்த வசதி

கோவை: கோவையிலுள்ள பத்திரப்பதிவுத்துறையின் கீழ் செயல்படும் 19 சார்பதிவாளர் அலுவலகங்களில் 'க்யூஆர் கோடு' வாயிலாக பணம் செலுத்தும் நடைமுறை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கோவையிலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் ஆன்லைன் வாயிலாக பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியை பொதுமக்களும், ஆவண எழுத்தர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் சொற்பமான, 1,000 ரூபாய்க்கும் குறைவாக பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், கூடுதல் வசதியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியால் வழங்கப்பட்ட குறுபணப் பரிவர்த்தனை இயந்திரம் (பாயின்ட் ஆப் சேல்) மற்றும் விரைவுக்குறியீடு (க்யூஆர் கோடு மற்றும் யு.பி.ஐ.,) வாயிலாக பணம் செலுத்தும் வசதியும் இதன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி, கோவையிலுள்ள பத்திரப்பதிவுத்துறையின் கீழ் செயல்படும், 19 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை