உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேள்விக்குறியான வாழ்வாதாரம்; டி.என்.ரைட்ஸ் அலுவலர்கள் தவிப்பு

கேள்விக்குறியான வாழ்வாதாரம்; டி.என்.ரைட்ஸ் அலுவலர்கள் தவிப்பு

கோவை; டி.என்.ரைட்ஸ் திட்டத்தின் கீழ், பணியமர்த்தப்பட்ட திட்ட அலுவலர்கள் திடீர் பணிவிடுவிப்பு செய்யப்பட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். மாற்று திறனாளிகள் மேம்பாட்டு துறையின் கீழ் 2022 முதல் செயல்படும் டி.என். ரைட்ஸ் திட்டத்தில் அனைத்து வசதிகள் மேம்பாடு, சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதன் கண்கணிப்புக்காக, மாற்று திறனாளி துறையின் திட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு விதிகளின் படி, ஒரு திட்டத்துக்காக பணியமர்த்தப்படும் பணியாளர்களை, திட்டம் முடிந்த பின்னரே பணியில் இருந்து விடுவிக்க முடியும். ஆனால், இத்திட்டத்தில் ஒப்பந்தம் முடிந்ததாக கூறி, மாநிலம் முழுவதும், 37 திட்ட அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட திட்ட அலுவலர்கள் கூறியதாவது: ஆகஸ்ட் 31ம் தேதி எங்களை காரணம் கூறாமல் விடுவித்தனர். டி.என். ரைட்ஸ் திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகளை கேள்வி கேட்பதால், எங்களை பழி வாங்கியுள்ளனர். நல்ல வேலையை விட்டுவிட்டு இப்பணிக்கு வந்தோம். இதனால், எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. தீபாவளி சமயத்தில் வேலையும் ஊதியமும் இன்றி அல்லாடுகிறோம். கோவை வந்த முதல்வரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டோம்; ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை