உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராதா கல்யாண உற்சவம் வடமதுரை விழாக்கோலம்

ராதா கல்யாண உற்சவம் வடமதுரை விழாக்கோலம்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள, வடமதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், மூன்று நாள் ராதா கல்யாண உற்சவம் நடந்தது.விழாவையொட்டி முதல் நாள், மஹா கணபதி ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தன. தொடர்ந்து, பக்தி பாடல்கள், வாய்ப்பாட்டு, கோலாட்டம், பஜனை, பரதநாட்டியம், நாம சங்கீர்த்தனம் நடந்தன.இரண்டாம் நாள் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், அஷ்டபதி மற்றும் நாம சங்கீர்த்தனம், பரதநாட்டியம், வினாடி - வினா நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு, பள்ளி மாணவ, மாணவியருக்கு சீருடை வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன.மூன்றாம் நாள் ராதா கல்யாண உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி இலவச மருத்துவ முகாம்கள் நடந்தன.விழா ஏற்பாடுகளை, ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி, தமிழ்நாடு பிராமணர் சங்கம் துடியலூர் கிளை செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி