ராதாகல்யாண மஹோத்ஸவ விழா
கோவை; ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் சாலையிலுள்ள ராமலிங்க சவுடேஸ்வரி ஹாலில் ராதா கல்யாண மஹோத்ஸவவிழா வரும் ஆக. 15 அன்று விமரிசையாக நடக்கிறது. கைலாச பாகவதர் பஜனை மடம் என்றழைக்கப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம், கோவை ஞானானந்த மண்டலி ஆகியவை சார்பில் வரும் ஆக.,15 அன்று, ராதாகல்யாண மஹோத்ஸவ விழா நடக்கிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை பாரம்பரியமும் கலாசாரமும் மாறாமல் நடத்தப்படுகிறது.காலை 10 மணிக்கு ராதா கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு திருக்கல்யாணத்தை ஒட்டி அறுசுவை சிறப்பு விருந்து நடக்கிறது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.