உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அஞ்சலகத்தில் ரயில்வே புக்கிங் நிறுத்தம்

அஞ்சலகத்தில் ரயில்வே புக்கிங் நிறுத்தம்

வால்பாறை: அஞ்சலகத்தில், ரயில்வே முன்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால், வால்பாறை மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வால்பாறை நகரில் உள்ள அஞ்சலகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே முன் பதிவு துவங்கப்பட்டது. இதற்காக தனி கவுண்டரும் துவங்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இதன் வாயிலாக வெளியூர் செல்லும் பயணியர் எளிதில் முன்பதிவு செய்து, ரயிலில் தங்கள் பயணத்தை இனிதாக தொடர்ந்தனர். குறிப்பாக, வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வர, அஞ்சலகத்தில் உள்ள ரயில்வே முன்பதிவை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இதன் வாயிலாக, அஞ்சலகத்திற்கும் நல்ல வருமானமும் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளூர் மக்களும், வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் கூடுதல் கட்டணம் கொடுத்து, தனியார் சேவை மையத்தில் ரயில்வே முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அஞ்சல அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை போஸ்ட் ஆபீசில் துவங்கப்பட்ட ரயில்வே முன்பதிவினால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயனடைந்தனர். ஆனால் சமீப காலமாக முன்பதிவு மிகவும் குறைவாக வருவதால், இந்த சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ