உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்

காற்றுடன் பெய்த மழை: வீடு இடிந்து பெண் காயம்

ஆனைமலை; ஆனைமலை அருகே, காற்றுடன் மழை பெய்ததில் வீடு இடிந்து விழுந்ததில் பெண் காயமடைந்தார். பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை பெய்கிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் ஆனைமலை நரசிம்மன் நகரில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பகுதியை சேர்ந்த அய்யம்மாள்,34, என்பவர் மகனுடன் வீட்டில் இருந்த போது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.அதில், அய்யம்மாளுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தோர், '108' ஆம்புலன்ஸ் உதவியுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ