உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்: சிறுவாணி அடிவாரத்தில் 16 மி.மீ.,

 மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்: சிறுவாணி அடிவாரத்தில் 16 மி.மீ.,

கோவை: கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. சிறுவாணி அடிவாரம் மற்றும் பில்லுார் அணை பகுதியிலும் மழைப்பொழிவு காணப்பட்டது. இதர பகுதியில் பெய்த மழை அளவு: வேளாண் பல்கலை - 15 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் - 19, மேட்டுப்பாளையம் - 8, பில்லுார் அணை - 42, கோவை தெற்கு - 4.40, தொண்டாமுத்துார் - 6, மதுக்கரை - 10, பொள்ளாச்சி - 91, மாக்கினாம்பட்டி - 10, கிணத்துக்கடவு - 4.40, ஆனைமலை - 20, ஆழியாறு - 15.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சிறுவாணி அடிவாரத்தில் 16 மி.மீ,, பதிவாகியிருக்கிறது; அணை பகுதியில் மழையில்லை. 37.20 அடியாக நீர் மட்டம் (மொத்த கொள்ளளவு 50 அடி) இருக்கிறது. மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களின் தேவைக்காக, நேற்று9.7 கோடி லிட்டர் குடிநீர் தருவிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது. வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'கொங்கு மண்டலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை மிதமானது முதல் சற்று கன மழை பதிவாக வாய்ப்பிருக்கிறது. சில இடங்களில் பெய்யாமல் விட்டு விடலாம். மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை