உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி வளாகத்தில் மழை நீர்: மாணவ, மாணவியர் தவிப்பு

பள்ளி வளாகத்தில் மழை நீர்: மாணவ, மாணவியர் தவிப்பு

நெகமம்: நெகமம் அருகே உள்ள சிறுகளங்தையில் அரசு துவக்கப்பள்ளி மற்றும் குழந்தைகள் மையம் செயல்படுகிறது. இங்கு, 40 குழந்தைகள் உள்ளனர். பள்ளி வளாகத்தில், மழைநீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று பெய்த மழையால் மீண்டும் பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் சிலர், குழந்தைகள் மழை நீரில் செல்வதை வீடியோ பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்ததை தொடர்ந்து, வி.ஏ.ஓ., நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து தேங்கிய மழை நீரை வெளியேற்றினர். மக்கள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், பள்ளி வளாகத்தில் அடிக்கடி மழை நீர் தேங்கும் சூழல் உள்ளது. தற்போது அதிகாரிகள் தற்காலிகமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். மழை பெய்யும் போது, இப்பகுதியில் மீண்டும் மழை நீர் தேக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதை சரி செய்ய, பள்ளி வளாகத்தில் மண் அல்லது கான்கிரீட் கலவை கொட்டி சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை