உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டுப்போட்டி நடத்தி போதைக்கு எதிராக விழிப்புணர்வு

விளையாட்டுப்போட்டி நடத்தி போதைக்கு எதிராக விழிப்புணர்வு

கோவை; போதையை தவிர், விளையாட்டில் நிமிர்! என்ற கோஷத்தில் இளைஞர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பா.ஜ., இளைஞரணி சார்பில் கோவையில் கால்பந்து போட்டி நேற்று நடந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்து 58 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக் அவுட்முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதிப்போட்டியில் சாய் எப்.சி., அணி முதலிடத்தை பிடித்து, கோப்பையை தட்டி சென்றது. இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளுக்கு நமோ கோப்பைகள், பதக்கம் மற்றும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை