உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோட்டை ஈஸ்வரருக்கு ரூ.1 கோடியில் ராஜகோபுரம்; பக்தர்கள் சூழ நடந்தது பூமிபூஜை

கோட்டை ஈஸ்வரருக்கு ரூ.1 கோடியில் ராஜகோபுரம்; பக்தர்கள் சூழ நடந்தது பூமிபூஜை

கோவை, ; கோட்டை சங்கமேஸ் வரர் கோவில் ராஜகோபுர கட்டுமான திருப்பணிக்கான கட்டட அடிக்கல் நாட்டுதல் மற்றும் பூமிபூஜை விழா நேற்று நடந்தது.கோவை கோட்டைமேட்டில் பழமையான சங்கமேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பழமையான கோபுரத்துக்கு பதிலாக மூன்று நிலைகளில், 36 அடி உயரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.1 கோடி மதிப்பில், ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திருக்கோவில் வளாகத்தில் நடந்தது.கோவில் மகாமண்டபத்தில் யாகசாலை அமைத்து பூர்வாங்க பூஜைகள், கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமங்களை தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. வேத விற்பன்னர்கள் சூழ தண்ணீரில் நனையச்செய்த செங்கற்கள் அடுக்கி வைத்து மலர் மாலைகள் துாவி புனித தீர்த்தங்கள் தெளித்து ராஜகோபுரம் அமைக்க பூமிபூஜைகள் நிறைவேற்றப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜசேகர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தயாளன், ராமநாகராஜன், துளசிமணி, செந்தில்குமார், கோவில் செயல் அலுவலர் அருண்பிரகாஷ், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ