ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா
கோவை : சிட்கோ ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், 13ம் ஆண்டு நவராத்திரி விழா, அக்., 2ல் துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது.சிட்கோ, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2வில் அமைந்துள்ளது, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் நவராத்திரி திருவிழா, அக்., 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகத்துடன் துவங்குகிறது. இரவு, 7:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, கொலு வழிபாடு நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.அக்., 12ம் தேதி வரை, தேவி கன்னியாகுமாரி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தானலட்சுமி, கொல்லுார் மூகாம்பிகை, சாரதாதேவி, சரஸ்வதி மற்றும் ராஜராஜேஸ்வரி என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில், அம்மன் அருள் பாலிக்கிறார். விழா நிறைவு நாளன்று, மாலை 6:30 மணிக்கு, அம்மன் வீதியுலா நடக்கிறது.