உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜிவ் பிறந்தநாள் விழா

ராஜிவ் பிறந்தநாள் விழா

கோவை: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராஜிவ் பிறந்தநாள் விழா, கீதா ஹால் ரோட்டில் உள்ள காங்., அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்., செயலாளர் மயூரா ஜெயக்குமார் பேசுகையில், ''இந்திய பிரதமர்களில் முக்கியமானவர் ராஜிவ். நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, நவீன தொழில் புரட்சிக்கு வழி வகுத்தார். பொருளாதாரத்தை தாராளமயம் ஆக்குவதற்கான பல்வேறு அடித்தளங்களை ஏற்படுத்தினார்,'' என்றார். கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் கருப்புசாமி, மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், வீனஸ்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி