உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராக்கி கயிறு அணிவித்து ரக் ஷாபந்தன் விழா

ராக்கி கயிறு அணிவித்து ரக் ஷாபந்தன் விழா

வால்பாறை; வால்பாறை நகரில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின், ராஜயோக தியான நிலையத்தில் ரக் ஷாபந்தன் விழா, பொறுப்பாளர் கற்பகம் தலைமையில் நடந்தது. விழாவில், திருப்பூர் மண்டல ராஜயோகினி ரேணுகா, பொள்ளாச்சி பொறுப்பாளர் பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டனர். சகோதரத்துவத்தை குறிக்கும் வகையில், புனிதமான ராக்கி கயிறு அணிவித்து இனிப்புகள் வழங்கினர். பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் பேசுகையில், 'இறைவனை ஜோதி வடிவில் காண, தியானம் மிக அவசியம். மனதில் தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தராமல், தியானம் செய்வதன் வாயிலாக மனதை ஒருநிலைப்படுத்தி, இறைவனை காணலாம். இன்பமும், துன்பமும் நிறைந்த வாழ்வில் மனிதனுக்கு எந்த சோதனை வந்தாலும், இறைவன் முன்னின்று காப்பாற்றுவார். பிறருக்கு தானம் செய்வதன் வாயிலாகவும் இறைவனை காணமுடியும். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் நாள் தோறும் தியானம் செய்வதன் வாயிலாக, ஜோதி வடிவில் இறைவனை காணலாம்,' என்றனர். விழாவில், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மகுமாரிகள் அமைப்பின் வால்பாறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், தொழிற்சங்க தலைவர் பரமசிவம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி