மேலும் செய்திகள்
கே.சி.எஸ்.காசி நாடார் அணி கபடியில் வெற்றி
24-Aug-2025
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான அதெலடிக் அசோசியேசன் சார்பில் நடத்தப்பட்ட ஆண்கள் பால் பேட்மின்டன் போட்டியில், ஆறு அணிகள் 'நாக்அவுட்' முறையில் விளையாடின. போட்டியை, ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணி, ஜி.பி.டி. கல்லுாரி அணியை எதிர்கொண்டது. ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2:0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாமிடத்தை ஜி.பி.டி. அணியும், மூன்றாம் இடத்தை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் அணியும் வென்றது.
24-Aug-2025