மேலும் செய்திகள்
பாரதியார் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
30-Mar-2025
கோவை; துடியலுார், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி மற்றும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ராமகிருஷ்ண பொறியியல் கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் மற்றும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனர் சவுகத் செருகட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் பல்வேறு படிப்புகள் மற்றும் தொழில்துறை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தொடர் கல்வி மையம் மூலம் சிறப்பாக தற்போதைய தொழில்நுட்பங்களை கற்க உதவி புரிகின்றது என முதல்வர் சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.இந்த நிகழ்வில், கல்லுாரியின் தொடர் கல்வி மைய தலைவர் சதீஷ் குமார் தலைவர், விஞ்ஞானிகள் சஞ்சீவ் குமார்,முனிவேல் விஞ்ஞானி ஆகியோர் கலந்து கொண்டனர்
30-Mar-2025