உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்: ருத்திரியம் பாளையம், ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அன்னுார் அருகே ருத்திரியம்பாளையத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. கடந்த 3ம் தேதி காலை கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை முதலாம் கால வேள்வி பூஜை நடந்தது. இரவு ஐம்பொன் நவரத்தினங்கள் பிரதிஷ்டை செய்தலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை, தச தரிசனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், மதியழகன் உட்பட 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை