மேலும் செய்திகள்
ஐபோன், பணம் பறிப்பு வாலிபர் மீது பெண் புகார்
03-Mar-2025
ஒண்டிப்புதுார்; இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை ஒண்டிப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் சிங்காநல்லுார் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பாப்பம்பட்டி, சந்தானலட்சுமி நகரைச் சேர்ந்த நித்யானந்தன், 24, என்ற வாலிபரும் பணியாற்றினார்.இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, நித்யானந்தன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். காதல் குறித்து, நித்யானந்தம் வீட்டில் தெரிவித்தபோது, அவரின் பெற்றோர் ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெண், நித்யானந்தனின் பெற்றோரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். இளம்பெண் அளித்த புகாரின்படி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், நித்யானந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரின் தந்தை பழனியப்பன், தாய் நவுயா ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக, சம்மன் அனுப்பியுள்ளனர்.
03-Mar-2025