உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகமாக பரவுது காய்ச்சல்: எச்சரிக்கிறார் டீன் நிர்மலா

வேகமாக பரவுது காய்ச்சல்: எச்சரிக்கிறார் டீன் நிர்மலா

கோவை : காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கோவையின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. காலநிலை மாற்றத்தால், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு, அதிகரித்து வருகிறது.பள்ளி குழத்தைகள், பெரியவர்கள் என, பலரும் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் காய்ச்சலுக்கு, புறநோயாளிகளாக, 52 பேர் சிகிச்சை பெற்றனர். கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:-தற்போது வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக வைரஸ், டெங்கு காய்ச்சல்களுக்கு சிறப்பு வார்டுகள், தயார்நிலையில் உள்ளன.தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல், உடல்வலி, சோர்வு, தொண்டைவலி ஆகிய அறிகுறிகளுடன் உள்ளது. சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். அதிக மழையின் போது வெளியில் செல்ல வேண்டாம். தேங்கிய மழைநீரில் நடக்க வேண்டாம்.இணை நோய் உள்ளவர்கள், விழிப்புடன் இருக்க வேண்டும். டாக்டர்களின் அறிவுரைப்படி, மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள், வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை