உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது

அரிய வகை பச்சோந்தி பிடிபட்டது

சூலூர்; ரங்கநாதபுரத்தில் வீட்டில் வலம் வந்த அரிய வகை பச்சோந்தி பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணம்பாளையம் அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் வீரா. இவரது வீட்டில் அரிய வகை பச்சோந்தி வலம் வந்தது. அடர்ந்த காடுகளில் மட்டுமே இருக்கும் இப்பச்சோந்தியை பொதுமக்கள் பலரும் கண்டு ஆச்சரியப்பட்டனர். உடல் நிறத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி குறித்து பாம்பு பிடி வீரரான அஜித் குமாருக்கு, வீரா தகவல் அளித்தார். அங்கு சென்ற அஜித் குமார், பச்சோந்தியை பிடித்து, மதுக்கரை சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை