உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடைதிறப்பு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்ன மத்தம்பாளையத்தில் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.சின்னமத்தம்பாளையத்தில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் உதயகுமார், பிளிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ராஜன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ