உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கேரளாவுக்கு கடத்த முயன்ற, 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் முரளிதரன் மேற்பார்வையில், எஸ்.ஐ., பாரதிராஜா மற்றும் போலீசார், அம்பராம்பாளையம் சுங்கம் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்தனர். வாகனத்தில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அப்போது, 'சூலுார் மலையடிபாளையம் செஞ்சேரிமலையை சேர்ந்த ராஜேஷ், பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், நஞ்சேகவுண்டன்புதுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 1,100 கிலோ ரேஷன் அரிசி, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ