உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பு ஆடை அணிந்து பணிக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்கள்

கருப்பு ஆடை அணிந்து பணிக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்கள்

கோவை; தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு ஆடை மற்றும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பணிக்கு வந்தனர்.சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:ரேஷன் துறையை தனித்துறையாக அறிவிக்க வேண்டும், ரேஷன் பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.பி.ஓ.எஸ்., கருவியுடன் எடை தராசு இணைப்பதில், கடை ஊழியர்களுக்கு பல சிரமங்கள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். கடைகளுக்கு சப்ளை செய்யும் ரேஷன் பொருட்களை, எடை குறையாமல் சப்ளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நேற்று 600 ரேஷன்கடை ஊழியர்கள் கருப்பு ஆடை மற்றும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பணிக்கு வந்தனர். கருப்பு ஆடை அணியும் போராட்டத்தை, வரும் 29ம் தேதி வரை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ