வடுகபாளையத்தில் புதிய கட்டடத்தில் ரேஷன் கடை
கருமத்தம்பட்டி; வடுகபாளையத்தில் புதிய கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட துவங்கியது.கிட்டாம்பாளையம் ஊராட்சி வடுக பாளையத்தில், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஊர் மக்களால், 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இடப்பற்றாக்குறை, பழைய கட்டடம் உள்ளிட்ட காரணங்களால், புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒன்றிய சேர்மன் பாலசுந்தரத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதிய ரேஷன் கடை கட்ட அவர், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து திறப்பு விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் சுப்புலட்சுமி, கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.