உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடியும் நிலையில் ரேஷன் கடை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

இடியும் நிலையில் ரேஷன் கடை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

நெகமம்; நெகமம் அருகே உள்ள, காட்டம்பட்டியில் இடிந்து விழும் ரேஷன் கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.ஏழை எளிய மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வகையில், தமிழக அரசால் ரேஷன்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, அவர்கள் ரேஷன்பொருட்களை பெற்றுச்செல்கின்றனர்.அந்த ரேஷன்டைகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கிணத்துக்கடவு அருகேகாட்டம்பட்டி ஊராட்சியில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 1,500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ஊராட்சியில், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே முழு நேர ரேஷன் கடை செயல்படுகிறது.இந்த ரேஷன் கடையின் வெளிப்புற மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால், அங்கு பொருட்களை வாங்க மக்கள் அச்சப்படுகின்றனர்.அங்கு பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும், கட்டடத்தின் மேற்பகுதியில் செடிகள் முளைத்தும், குப்பையாகவும் காணப்படுகிறது.இதனால், இங்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிலர் ரேஷன் பொருட்கள் வாங்கும் போது மேற்கூரை கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். மக்கள் நலன் கருதி ரேஷன் கடை கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, வருவாய்த்துறையினரும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மக்கள் ரேஷன்கடையில் நிம்மதியாக பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை