மேலும் செய்திகள்
நான்கு வழிச்சாலை பணி அன்னுாரில் துவங்கியது
29-Oct-2025
அன்னூர்: மூன்று புறவழிச் சாலைகளின் அறிவிப்பால், அன்னூர் தாலுகாவில் ரியல் எஸ்டேட் வேகம் பிடித்துள்ளது. அன்னூர் தாலுகாவில், 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த, 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இப் பகுதியில் மூன்று புற வழிச்சாலைகள் அமையவுள்ளதால், ரியல் எஸ்டேட் வர்த்தகம், சூடுபிடித்துள்ளதாக பத்திர எழுத்தர் கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக, அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், வீட்டு மனை இடங்களின் பத்திரப்பதிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்னூருக்கு தெற் கே கரியாம்பாளையம், காரே கவுண்டன் பாளையம், குப்பேபாளையம் உள்பட பல ஊராட்சிகளில், புதிதாக 'லே-அவுட்'டுகள் அமைத்து, வீட்டு மனைகள் விற்பனை நடக்கிறது. அவிநாசியில் இருந்து கருவலூர், அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்துக்கு, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. 60 சதவீத பணி முடிந்து விட்டது. இதேபோல், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, கோவில்பாளையம், அன்னூர், வழியாக கர்நாடக எல்லை வரை, மேற்கு புறவழிச் சாலை அமைக்க ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளன. புறவழிச்சாலை அமையும் நிலங்கள், பத்திர பதிவு செய்ய முடியாதபடி முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு புறவழிச் சாலைக்கு, கிட்டாம் பாளையம், கணேசபுரம் பகுதியில் எல்லை கற்கள் நடப்பட்டு வருகின்றன. இவ்வாறு, புறவழிச்சாலைகள் அமைவதால், வீட்டுமனைகள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
29-Oct-2025