மேலும் செய்திகள்
உடல் வலியா...? எலுமிச்சை இஞ்சி ரசம் குடிங்க!
07-Sep-2024
நண்டு - 1/4 கிலோசின்ன வெங்காயம் - இரண்டு (பொடியாக நறுக்கவும்)தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கவும்)பச்சை மிளகாய் - மூன்றுபூண்டு- நான்கு இஞ்சி - சின்ன துண்டுகடுகு - கால் ஸ்பூன்சீரகம் - கால் ஸ்பூன்மிளகு - கால் ஸ்பூன்சோம்பு - அரை ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுகொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)உப்பு - சுவைக்கு ஏற்பதண்ணீர் - தேவையான அளவுநல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை
நண்டை தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் கழுவி வைத்த நண்டை சேர்க்கவும். பின் அதில் அரைத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார், பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும். நண்டு நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மிளகு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின் தாளித்த இதனை நண்டுடன் சேர்த்து கலக்கவும். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை துாவி பரிமாறலாம். இதை அப்படியே குடிக்கலாம், இல்லை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
07-Sep-2024