உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணி சாலையில் புனரமைப்பு பணி

சிறுவாணி சாலையில் புனரமைப்பு பணி

தொண்டாமுத்தூர்; சிறுவாணி சாலையில், 5.2 கோடி ரூபாய் மதிப்பில், சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி துவங்கி நடந்து வருகிறது.இச்சாலையில், ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையை விரிவாக்கம் செய்ய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாதம்பட்டி முதல் இருட்டுப்பள்ளம் வரையிலான சாலையில், சாலை அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலான பகுதிகளில், சாலை புனரமைப்பு மற்றும் இருட்டுப்பள்ளம் - சாடிவயல் சாலையில், 1 கி.மீ.,க்கு, சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி