உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொள்முதலுக்கும் பதிவேடு அவசியம்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

கொள்முதலுக்கும் பதிவேடு அவசியம்; உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

கோவை; ''உணவு சார்ந்த தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது தொடர்பான விபரங்களை கட்டாயம் பதிவேடாக பராமரிக்க வேண்டும்,'' என, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார். கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பேக்கரி உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: உணவு பாதுகாப்பு தர நிர்ணய பயிற்சி சான்று, உணவு கையாள்பவர்களுக்கு மருத்துவச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம், கழிவுகள் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, லேபிளிங் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பேக்கரி, ஹோட்டல்கள் என, உணர்வு சார்ந்த தொழிலில் உள்ள அனைவரும் கட்டாயம் மூலப்பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை எங்கிருந்து, யாரிடம் இருந்து கொள்முதல் செய்கிருக்கிறீர்கள் என்கிற பதிவேடு பராமரிக்க வேண்டும். உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கும்போது, கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அப்பொருளை தயாரித்தவர்களே முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவர். பதிவேடு இல்லை எனில், மாதிரி எங்கு எடுக்கப்படுகிறதோ அவர்களே பொறுப்பு. தவிர, ஆறு மாதத்துக்கு ஒரு முறை தண்ணீர் தர ஆய்வு, சுய மதிப்பீடு ஆய்வு செய்து, பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை