உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரெட் அலர்ட் எதிரொலி; கோவை குற்றாலம் மூடல்

ரெட் அலர்ட் எதிரொலி; கோவை குற்றாலம் மூடல்

தொண்டாமுத்தூர்; கோவைக்கு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, கோவை குற்றாலம் நேற்று மூடப்பட்டது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், கனமழை பெய்து நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகளுக்கு நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர். இதுகுறித்த தகவல் தெரியாததால், நேற்று காலை, கோவை குற்றாலத்திற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ